திமிங்கில வேட்டையை ஆரம்பிக்கும் ஜப்பான்

Published By: Vishnu

27 Dec, 2018 | 12:22 PM
image

வணிக ரீதியாக திமிங்கிலங்களை வேட்டையாடுவதை அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் யோஷிஹிடே சுகா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

வணிகரீதியான திமிங்கிலப் பிடிப்பு ஜப்பானின் தேசிய கடற்பரப்பிலும், பொருளாதார மண்டலங்களிலும் மட்டுமே நடக்கும்.

இதன் விளைவாக, அண்டார்க்டிக் பகுதியிலும், தென் கோளப் பரப்பிலும் திமிங்கில வேட்டையாடுவதை ஜப்பான் நிறுத்திக்கொள்ளும். 

சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையம் திமிங்கிலங்களின் எண்ணிக்கையை பாதுகாப்பது என்ற ஒரே இலக்கில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், அதன் மற்றொரு இலக்கான நீடித்த நிலைத்த வணிகரீதியிலான திமிங்கிலப் பிடிப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது என்பதற்கு அது போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் ஜப்பான் அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986 ஆம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம்.

1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒருவர் திமிங்கிலங்களை உண்பது ஜப்பான் பண்பாட்டின் ஓர் பகுதி என்று தெரிவித்துள்ளார்.

வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிக்கப்போவதாக ஜப்பான் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சில நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனால் மோசமான பின் விளைவுகள் இருக்கும் என்று சர்வதேச உயிரினப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13