இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ண முத­லா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் நியூ­ஸி­லாந்தை அதி­ர­வைத்த இங்­கி­லாந்து 7 விக்­கெட்­டுக்­களால் மிகவும் இல­கு­வாக வெற்­றி­பெற்று உலகக் கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

சுப்பர் – 10 சுற்றில் அபார வெற்­றி­களை ஈட்டி அரை­யி­று­திக்குள் நுழைந்த நியூ­ஸி­லாந்து அரை­யி­றுதிப் போட்­டியில் இங்­கி­லாந்தின் ஆட்­டத்­திற்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் சர­ண­டைந்­தது.

பந்­து­வீச்சில் பென் ஸ்டோக் ஸும், துடுப்­பாட்­டத்தில் ஜேசன் ரோய், ஜொஸ் பட்லர் ஆகி­யோ ரும் இங்­கி­லாந்தின் அபார வெற்­றிக்கு அடி­கோ­லினர்.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்தின் ஆரம்ப வீரர் மார்ட்டின் குப்டில் அதி­ர­டி­யாக பவுண்ட்­ரி­யுடன் ஆரம்­பிக்க டேவிட் வில்­லியின் முத­லா­வது ஓவரில் 17 ஓட்­டங்கள் நியூ­ஸி­லாந்­துக்கு குவிந்­தன. மூன்­றா­வது ஓவரில் குப்டில் ஆட்­ட­மி­ழந்த பின்னர் அணித் தலைவர் கேன் வில்­லி­யம்­சனும் கொலின் முன்­ரோவும் இரண்­டா­வது விக்­கெட்­டிற்கு 74 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தி­ருந்­த­போது மொயின் அலியின் பந்­து­வீச்சில் வில்­லி­யம்சன் அவ­ரி­டமே பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்தார். இதனை அடுத்து ஓட்ட வேகத்தை அதி­க­ரிக்க விளைந்த நியூ­ஸி­லாந்து வீரர்கள் சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டுக்­களை பறி­கொ­டுத்­தனர்.

முதல் 10 ஓவர்­களில் ஒரு விக்­கெட்டை மாத்­திரம் இழந்து 89 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த நியூ­ஸி­லாந்து கடைசி 10 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 64 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

அதன்­படி நியூ­ஸி­லாந்து அதி­ர­டி­யுடன் ஆரம்­பித்­த­போ­திலும் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்­கெட்­டு­களை இழந்து 153 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.

பதி­லுக்கு ஆடிய இங்­கி­லாந்து எதி­ர­ணி­யி­னரின் அதி­ர­டியை விஞ்சும் வகையில் அசுர வேகத்தில் ஓட்­டங்­களைக் குவித்து 17.2 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம்

இழந்து 159 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது.

கோரி அண்­டர்­சனின் முத­லா­வது ஓவரில் 16 ஓட்­டங்­களைக் குவித்த இங்­கி­லாந்து 5 ஓவர்கள் நிறை வில் 60 ஓட்­டங்­க­ளையும் 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்­கெட்டை இழந்து 98 ஓட்­டங்­க­ளையும் குவித்­தி­ருந்­தது.

ஆரம்ப விக்­கெட்டில் ஹேல்­ஸுடன் 82 ஓட்­டங்­களைப் பகிர்ந்த ஜேசன் ரோய் மொத்த எண்ணிக்கை 110 ஓட்­டங்­க­ளாக இருந்­த­போது சோதியின் பந்­து­வீச்சில் 78 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்தார்.

சோதி தனது அடுத்த பந்தில் இங்­கி­லாந்து அணித் தலைவர் மோர்­கனை எல். பி. டபிள்யூ. முறையில் வெளி­யேற்ற ஆட்­டத்தில் திருப்­பு­முனை ஏற்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால், ஜோ ரூட்டும் பட்­லரும் நிதானம் கலந்த வேகத்­துடன் துடுப்­பெ­டுத்­தாடி இங்­கி­லாந் தின் வெற்றியை உறுதி செய்தனர். ரூட் 27 ஓட்டங்களுடனும் பட்லர் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக் காதிருந்தனர். இவர்கள் இருவரும் வீழ்த்தப்படாத 4ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த னர். ஆட்டநாயகன் விருது ஜேசன் ரோயுக்கு வழங்கப்பட்டது.