"உரிமையை கோரும் வட, கிழக்கு தலைமைகள் வெள்ளத்தின் போது தலைகாட்டவில்லை"

Published By: Vishnu

26 Dec, 2018 | 03:58 PM
image

(நா.தனுஜா)

வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதுடன், அங்குள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தமையின் காரணமாக விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

எனவே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே பெருமளவிலான இராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1400 குடும்பங்கள், அதாவது சுமார் 4900 வரையிலான தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 16 இலக்க ஐ.ஜி.பி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 300 இராணுவ வீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8 பிரதேசங்கள் வெள்ளப்பெருக்கினால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள அதேவேளை, அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500 தனிநபர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். 

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக 150 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது நிர்வாக அதிகாரிகள் இதனைப் பொறுப்பேற்கும் வரை நாம் இந் நடவடிக்கைகளில் ஈடுபடுபட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47