முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா

Published By: Vishnu

26 Dec, 2018 | 01:04 PM
image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 2 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு 20 தொடர் ஏற்கனவே சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 

இந் நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி முதலாவதாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 89 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, 215 ஓட்டங்களை குவித்தது. 

இந்திய அணியின் அறிமுக வீரரான மயக் அகர்வால் 76 ஓட்டத்தையும், பெற்றுக் கொடுத்ததுடன், புஜரா 68 ஓட்டத்துடனும், விராட் கோலி 47 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பேட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35