நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கூட்டமைப்பு ஆதரவை வழங்கியது - சிறிநேசன்

Published By: Vishnu

26 Dec, 2018 | 12:44 PM
image

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது பணநாயகத்தின் பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் சில நிபந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார்.

ஒளிவிழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும்  நிகழ்வு மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இதனைக் கூறினார்.

கிராம அபிவிருத்திச்சங்கச் செயலாளர் சுப்ரமணியம்  ரகுபரன் தலைமையில் இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இளயதம்பி சிறிநாத்,  ஏறாவூர் நகர முதல்வர் ஐ. அப்துல் வாசித் , நகர சபை உறுப்பினர்களான கணேசன் பிரபாகரன் , எம்எஸ். நழீம் மற்றும் உள்ளிட்ட பலர் இந் நிகழாவில் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒரு தொகை பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்  சமூக முன்னோடிகள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சிறிநேசன் எம்.பி,

சர்வாதிகாரத்தைவிட மக்களின் அணைக்கு மதிப்பளிக்க வேண்டும். எமது ஐந்து வருடகால ஆயுள்கொண்ட பாராளுமன்றத்தை சர்வாதிகார அடிப்படையில் கலைக்கின்போக்கினைத் தோற்கடிக்க சிறுபான்மைக்கட்சிகள் ஒன்றிணைந்துசெயற்பட்டோம்.

அரசாங்கத்தை சூழ்ச்சியின் மூலம் அரசைக் கவிழ்ப்பது பிழையான நடவடிக்கை என்பதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்த்தது. ஜனநாயகத்தை சட்டவாட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு உச்ச கட்ட ஆதரவை வழங்கியது.

நிறைவேற்று அதிகாரம் பக்கச் சார்பாக செயற்பட்டது சட்டவாட்சியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் நீதித்துறை சுதந்திரமாக சுயாதீனமாக செயற்பட்டதன் காரணமாக ஜனநாயக அடிப்படையில் ஜனநாயக அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சிய அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு என்பன போன்ற விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58