மத­வாச்சி பகு­தியில் வாகன விபத்தில் உயி­ரி­ழந்த நிலையில் அடக்கம் செய்­யப்­பட்ட சிறுமி ஒரு­வரின் சடலம் மீண்டும் இர­க­சி­ய­மாக தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 28ஆம் திகதி குறித்த சிறு­மியின் இறுதிக் கிரி­யைகள் நடை­பெற்­றுள்­ள­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினமிரவு மயா­னத்­தி­லுள்ள கல்­ல­றையில் இருந்து இர­க­சி­ய­மாக ஒரு­வரால் சடலம் தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் சிறு­மியின் தந்தை மத­வாச்சி பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இத­னை­ய­டுத்து மயா­னத்­துக்கு அதிக பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்தேகநபரைத் தேடி மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.