அமெரிக்கத்  துருப்புக்களின் சிரிய வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்கானில் இந்தியாவின் சவால்கள்

Published By: Digital Desk 4

25 Dec, 2018 | 05:28 PM
image

மத்திய கிழக்கில் சிரியாவில் இருந்து துருப்புக்களை வாபஸ்பெறும் தனது தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த மறுநாள் ஆப்பானிஸ்தானில் இருந்தும் கணிசமான அளவில் துருப்புக்கள் வாபஸ் பெறப்படவிருப்பதாக செயதிகள் வெளியாகின.

ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 7000 படையினரை விலக்கிக்கொள்ள ட்ரம்ப் நிருவாகம் தீர்மானித்திருக்கிறது. இந்த தீர்மானம் ஆப்கானிஸ்தானிலும் அயல்நாடுகளிலும் சமாதானத்துக்கு பாரதூரமான விளைவுகளைக்கொண்டுவரும்.ஜனாதிபதி ட்ரம்ப் 2017 ஆகஸ்டில் அறிவித்த தனது ஆப்பான் தந்திரோபாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுமையுடன் காத்திருக்க முடியாதவராக இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

வெளிநாடுகளில் தலையிடுவதில்லை என்ற தனது இயல்பான எண்ணத்தைச் சற்று கட்டுப்படுத்திக்கொண்டு ட்ரம்ப் ஆப்பான் போருக்கு கூடுதல் வளங்களையும் படையினரையும் அனுப்புவதாக அப்போது தீர்மானித்திருந்தார்.ஒரு வருடம் கழித்து சோர்வடைந்த நிலையில் அவர் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தீர்மானித்தார். ஆப்கானிஸ்தானில் பிறந்த அமெரிக்க இராஜதந்திரியான சால்மே காலில்சாட்டை  பேச்சுவார்த்தை பணிக்காக அவர் நியமனமும் செய்தார்.

தலிபான்கள் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யமுன்வந்திருந்தால் மாத்திரமே படைவாபஸ் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா செய்திருக்வேண்டும்.விட்டுக்கொடுப்பு எதையும் செய்யாததுமாத்திரமல்ல தலிபான்கள் தற்போதைய ஆப்கான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தும்விட்டார்கள்.அரசாங்கம் சட்டவிரோதமானது என்று அதற்கு அவர்கள் காரணம் கற்பிக்கிறார்கள்.

மேலும், கடந்த மாதம் மாஸ்கோவின் மத்தியஸ்தத்தின் கீழ் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது தலிபான் பிரதிநிதிகள் அமெரிக்கப்படைகள் விலவேண்டும் என்ற கோரிக்கைக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முழுப்பலத்துடன் இருந்தபோது விட்டுக்கொடுப்புகளைச் செய்யாத தலிபான்கள் அப்படைகள் விலகிய பிறகு விட்க்கொடுக்க முன்வருவார்கள் என்று நினைப்பது வெறும் மாயையேயாகும்.பாகிஸ்தான் இராணுவத்திடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற ஆதரவும் உதவியுமே தலிபான்களின் மீளெழுச்சிக்குக் காரணமாகும்.ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரிக்கவிருக்கிறது.

இவையெல்லாம்  இரண்டு பிரதான நலன்களைக் கொண்டிருக்கும்  இந்தியாவுக்கு நல்ல அறிகுறிகள் அல்ல. ஆப்கானிஸதானை எந்தவொரு தீவிரவாதக்குழுவும் பொறுப்பேற்காமல் தடுப்பதும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனும் சிவில் சமூகத்துடனும் பொருளாதார உறவுகளைப் பேணுவதுமே அந்த நலன்களாகும். ரஷ்யா, ஈரான் போன்ற பாரம்பரிய பிராந்திய பங்காளி நாடுகள் ஆப்கானிஸ்தான் தொடர்பில் கொண்டிருக்கும் பார்வைகளில் இருந்து இந்தியாவின் பார்வை குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டிருக்கின்ற ஒரு நேரத்தில் அமெரிக்கப் படைகளின் உத்தேச விலகல காரணமாக  இந்தியாவின் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கின்றன.

தலிபான்களுக்கு எதிராக 1990 களின் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்ட முன்னாள் வடக்கு கூட்டணயில் உள்ளவர்களுடனான தொடர்புகளை இந்தியா கைவிட்டுவிடக்கூடாது.உறிதிப்பாடின்மை ஏற்படும் பட்சத்தில் களத்தில் இருக்கின்ற நேச அணிகளினால் மாத்திரமே பேச்சுவார்த்தை மேசையில் புதுடில்லிக்கு ஒரு இடத்தை பெற்றுத்தரக்கூடியதாக இருக்கும்.

( இந்துஸ்தான் டைம்ஸ் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04