வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சேர்க்கும்பணி ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

25 Dec, 2018 | 12:12 PM
image

வன்னி வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்காக மட்டக்களப்பில் மாவட்டச் செயலகமும்,மாநகர சபையும் நிவாரணம் சேகரிப்பு பணியை ஆரம்பித்துள்ளது.வன்னிப் பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணி நேற்று மாலை (24.12.2018) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் மாநகரசபையின் அனர்த்த முகாமைத்துவக் குழுவினர் சேகரித்த அத்தியாவசியப் பொருட்களை  அரசாங்க அதிபர் மா. உதயகுமார் மற்றும் மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவனிடம் கையளித்தனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கம், றோட்டறிக் கழகம், சிவில் சமூகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொது அமைப்புகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்க உறுதியளித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்படி  திங்கட்கிழமை (24) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிவரை பொருட்களை காந்திப் பூங்காவில் அமைந்துள்ள பொருட்கள் சேகரிக்கும் நிலையத்தில் கையளிக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08