ஜனாதிபதியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது

Published By: Vishnu

25 Dec, 2018 | 10:59 AM
image

வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை பிரதேச செயலாளர்களை  கொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது  வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். வவுனியாவிலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலிருந்த காணிப்பிணக்குகள் நீண்டகாலமாக சீர் செய்யப்படவில்லை. 

அத்துடன் வன இலகா திணைக்களத்தின் காணிகளில் மக்கள் குடியேற்றியுள்ளதை மீட்பது தொடர்பாகவும் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமைகளை சீர் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செலயகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் ஒன்றின் அடிப்படையில் இக்கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களின் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41