மூன்றாவது அணி உருவாகுமா...“ஸ்டாலின்”அதிரடி பதில்

Published By: R. Kalaichelvan

24 Dec, 2018 | 05:52 PM
image

சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கிய பின்னர் அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்  என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

“தி.மு.கவின் ஆலோசனை க் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மக்களிடம் செல்வோம். 

மக்களிடம் சொலவோம்,மக்கள் மனங்களை வெல்வோம் என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சி பகுதிகளுக்கு சென்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என்று குற்றம் சாட்டும் பிரதமர் மோடி,அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி எடுப்பதாக எங்களுக்கு செய்தி வருகிறது.அது கொள்கை கூட்டணியா? அல்லது கொள்ளை கூட்டணியா? என்பது தான் என்னுடைய கேள்வி. இன்னும் சொல்லப்போனால் இதே ஒ.பி. எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரையும் சேர்த்துவைக்க முயற்சித்தவர்,கையைக் குலுக்கு அவர்களை சேர்த்து வைத்தவர் மோடி. இதற்கு இது தான் பதில். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் நான் திமுகவின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளேன். 

நான் வெளிப்படுத்திய உணர்வை யாரும் எதிர்க்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பின்னால் அறிவித்திருக்கலாம் என்ற கருத்தே நிலவுகிறது. அப்படி சொல்பவர்களும் விரைவில் அப்படி பேசக்கூடியவர்களும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தி.மு.க சொன்ன அந்த உணர்வுடன் முழங்குவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சந்திரசேகர் ராவ் மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கியதும் அது குறித்து தெரிவிக்கிறேன். எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் இந்திரா காந்தியே, அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.அது ஜனநாயகம், ஆனால் இன்றைய தினம் எமர்ஜென்ஸியை விட மோசமான சர்வாதிகார ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47