மரணத்தில் முடிந்த போதைப்பொருள் ஆசை: கழிவறையில் விஷ ஊசி போட்டு கொண்ட வைத்தியரால் பரபரப்பு

Published By: J.G.Stephan

23 Dec, 2018 | 04:13 PM
image

இந்தியா, திருச்சி அரச வைத்தியசாலையில், விஷ ஊசி போட்டு கழிவறையில் பயிற்சி வைத்தியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகரை சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மகன் சுதர்சன் வயது (24). இவர் திருச்சி அரச வைத்தியசலையில் பயிற்சி வைத்தியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியிலிருந்த சுதர்சன் கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால் வைத்தியரை யாரும் தேடவில்லை.

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணியாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது, 3ம் எண் கழிவறையில் வைத்தியரான சுதர்சன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளனர்.

அவரது சத்தம் கேட்டு தாதிமார்களும், வைத்தியர்களும் வந்து அவரை பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. கழிவறையினுள் ஒரு ஊசி சிரிஞ்ச் கிடந்தது. அருகில், ”கேட்டமைன்” என்ற போதை பொருள் போத்தலும் கிடந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுதர்சனின் பெற்றோரும் வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுதர்சனுக்கு அடிக்கடி போதை ஊசி மற்றும் மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால், மன உளைச்சல் அடைந்த அவர், கேட்டமைன் என்ற போதை பொருளை அதிகளவில் செலுத்தி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52