வவுனியா கொக்கலிய பிரதேசத்தில் 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்" எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கான வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் பூங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கும் வீடொன்றை அமைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார் அதேபோல் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயர் தற்போது பெயர்ப்பலகையில் மட்டுமே உள்ளது. எனவே நாம் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் மிக முக்கியமான செயற்பாடாக தேசிய நல்லிணக்கத்தையும் மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதையும் கொண்டுள்ளது. நாம் வடக்கு தெற்கு மக்களிடையே தேசிய உணர்வை ஏறபடுத்துவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றோம். இதனையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் தனது கொள்கையாக கொண்டுள்ளார். தற்பொது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறத்தல் நிலவுவதாக மக்களிடையே போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

ஆனால் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் அதிக வழிப்புணர்வுடன் செயற்படுகின்றோம். இதற்கென கடற்படை, விமானப்படை, மற்றும் சிவில் பொலிஸ் என்பனவற்றுக்கு சகல விதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டள்ளன. அத்தோடு நாம் அனைத்து விதமான தீவிரவாத நடவடிக்கைகளையும் முடக்க ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.

எனவே மக்களிடையே பொய்யான பிரச்சாரங்களை கொண்டுசெல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தனியாட்சி வேண்டும் என்ற நிலைப்பாட்டடை மாற்றிக்கொள்ள தயங்குகின்றனர். ஆனால் இந்நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு சகல இணக்குழுக்கள் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதவே இவ்வாறான படைவீரர் கிராமங்களை உருவாக்கியுள்ளோம்;. அதேபோல் தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்பது பெயர்பலகைகளுகக்கு மட்டுப்படுத்தப்பட்ட விடயமாகியுள்ளது.

எமது நாட்டின தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையிலான எந்த விதமான பாதகமான தன்மைகளும் தற்போது இடம்பெறவில்லை எனவே அதியுயர் வலையங்களிள் செயற்பாடுகள் பெயர்பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்களை விடுவித்து முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற செயற்பாடுகளினாலும் எமது எவ்வாறான எதிர்விளைவுகக்கு முகம்கொடுக்க வேண்டிய அவசியம் தோன்றாது அதனால் தேசிய பாதுகாப்பையும் கருத்திற்கொண்டாதாக மீள்குடியேற்ற செயற்பாடுகள் அமையும் என்றார்.