மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: R. Kalaichelvan

22 Dec, 2018 | 04:53 PM
image

மலையக மக்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை  1000 ரூபாவாக உயர்த்தக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மலையக இளைஞர்கள் நால்வர் மேற்கொண்ட உணவு தவிர்பபு போராட்டாத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மலையகப் பகுதிகள் பலவற்றிலும் தோட்ட மக்கள் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து லிந்துலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளத்தை உயர்த்த கோரியும் இதே கோரிக்கையை முன்னிலைப்படுத்தி கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் 22.12.2018 அன்று லிந்துலை மெராயா ஊவாக்கலை தோட்ட மக்கள் மற்றும் தங்ககலை தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும், பூஜை வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர்.

அந்தவகையில் லிந்துலை ஊவாக்கலை தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மீட்டுத்தருமாறு அழுத்தம் கொடுத்து ஊவாக்கலை ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு கொடிகளையும் பதாதைகளையும் ஏந்திய வண்ணம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு தங்ககலை தோட்டத்தில் தோட்ட மக்கள் குறித்த இளைஞர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது எனவும், அவர்களின் கோரிக்கைகள் வெற்றிப்பெற வேண்டும் எனவும் ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர்.

தங்ககலை விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிலும், கிறிஸ்தவ ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளிலும் ஈடுப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47