வெள்ளத்தால் பாதிக்கட்ட மக்களுக்கு உதவுமாறு ரிஷாட் பணிப்புரை

Published By: R. Kalaichelvan

22 Dec, 2018 | 03:53 PM
image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.குறிப்பிட்ட மாவட்டங்களில் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புக் கொண்ட அமைச்சர், கடும் மழை காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு  உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே வேளை இந்தப் பிரதேசங்களின் நிலைமை குறித்து முல்லைத்தீவு மாந்தை கிழக்கு  பிரதேச சபைத் தவிசாளர் நந்தன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்தார். 

வெள்ளத்தின் காரணமாக விளங்குளம் பகுதியில் உள்ள 16 குடும்பங்கள் இருப்பிடம் இழந்து பிற இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாவும்,  வவுனிக்குளத்தில் நன்நீர் மீன் வளர்ப்பில் ஈடுபடும் அம்பாள் குள மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் வலைகள் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் நந்தன் தெரிவித்தார்.

"பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

மாந்தை கிழக்கிற்கான வீதிப் போக்குவரத்து தடைப்படுத்தப்பட்டுள்ளது." தெரிவித்த தவிசாளர் நந்தன் தொண்டர் நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51