கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச் சென்ற தொழிலாளியின் சடலமொன்று, சேனை வாடியொன்றிலிருந்து, புத்தலை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

பசறைப் பகுதியின் கமேவலை தோட்டத்திலிருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச்சென்ற எஸ்.சண்முகம் என்ற 46 வயது நிரம்பிய தொழிலாளியே மரணமானவராவார்.

இவரது சடலம், வைத்திய பரிசோதனைக்காக, புத்தலை அரசினர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் இயற்கை மரணமா? கொலையா? என்பது குறித்து, தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

(க.கிஷாந்தன்)