பாது­காப்புத் தலை­வரின் தலையில் காலால் உதைத்த உக்­ரே­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர்

24 Nov, 2015 | 06:11 PM
image

உக்­ரேனில் ஊழ­லுக்கு எதி­ரான கூட்­ட­மொன்றில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பாது­காப்புத் தலை­வரின் தலையில் காலால் உதைத்­ததால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

மேற்­படி கூட்­டத்தில் கலந்து கொண்ட லவிவ் பிராந்­திய பாது­காப்புத் தலை­வ­ரான வஸிலி பிஸ்னி (52 வயது), பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான வொல­டிமைர் பரா­சுக்கை (28 வயது) விடவும் தான் உக்­ரே­னிய நல­னுக்­காக அதி­க­ளவில் பணி­யாற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கவும் அவ­ரது கருத்தால் கடும் சினத்­துக்­குள்­ளா­கிய பராசுக் திடீ­ரென தனது காலைத் தூக்கி வஸிலி பிஸ்­னியின் தலையில் உதைத்­துள்ளார்.இதனால் அந்தக் கூட்­டத்தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அங்­கி­ருந்த ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தலை­யிட்டு இரு­வ­ரையும் அங்­கி­ருந்து தனித்­த­னி­யாகப் பிரித்து அழைத்துச் சென்று மேலும் மோதல்கள் ஏற்­ப­டாது தடுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் பராசுக் விப­ரிக்­கையில், இது உணர்ச்­சி­வ­சப்­பட்­டதால் ஏற்­பட்ட நிகழ்­வாகும். இது போன்று ஒருவர் இவ்வாறு தவறான சொற்பிரயோகத்தைக் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right