குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளின் அபிவிருத்திக்கு 195 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு:ஜனாதிபதி

Published By: R. Kalaichelvan

22 Dec, 2018 | 08:20 AM
image

நாட்டின் தூரப் பிரதேசங்களிலுள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும் பௌத்த புனருத நிதியத்தினால் விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

46 விகாரைகளுக்காக 195 மில்லியன் ரூபா இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், உரிய விகாரைகளின் விகாராதிபதி தேரர்களிடம் ஜனாதிபதி அவர்கள் காசோலைகளை வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி எண்ணக்கருவில் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த புனருத நிதியத்தினால் 2016 ஆம் ஆண்டில் 116 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டில் 167 மில்லியன் ரூபாவும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த புனருத நிதியத்தின் கீழ் குறைந்த வசதிகளை உடைய விகாரைகள் தற்போது உரியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர்களின் உதவியும் தொழிற்பங்களிப்பும் அந்நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

காணி பிரச்சினைகள் காணப்படும் விகாரைகளுக்கு காணி உறுதிகளை வழங்கி வைப்பதன் ஊடாக அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஜனாதிபதி அவர்களால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமரபுர சிறிசத்தம்மவங்ச மகா நிக்காயவின் அதிவண. அஹுங்கல்லே சிறி சீலவிசுத்தி மகாநாயக்க தேரர், கிழக்கு மாகாணம், தமன்கடுவ ஆகிய இரு பிரதேசங்களின் அஸ்கிரி பிரிவின் பிரதான சங்கநாயக்கர் வண. மகுரெபே ஸ்ரீ தர்மகீர்த்தி இந்ரஜோதி பஞ்ஞாசேகராபிதான நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51