(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின் போது ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 

அமைச்சரவை குறித்த பொய்யான கருத்துக்களை கூறி சதிகளை செய்து வருவதாகவும் ஜனவரியில் கருப்பு ஊடகங்களின் பட்டியலை சபையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாரளுமன்றத்தில் இன்று அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கணக்கறிக்கை மீதான விவாதத்தை ஆரம்பித்த பிரதமர் ஒரு கட்டத்தில் ஊடகங்களை கடுமையாக சாட ஆரம்பித்தார். 

தற்போது அமைச்சரவையில் யார் இருக்கின்றார்கள் யார் இல்லை என்பது தொடர்பாக இன்றைய தினம் பத்திரிகைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன, எவ்வாறாயினும் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட பின்னர் நான் பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்த நான் எதிர்பார்த்திருந்தேன்.  

அமைச்சரவை பாராளுமன்றத்திற்கே பொறுப்பு கூற வேண்டும் என்ற நிலைமை உள்ளது.  அதேபோல்  சில விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம். 

வெவ்வேறான நிலைப்பாடுகள் எம்மத்தியில்  இருக்கின்றன. அவை குறித்து பேச்சுவார்த்தை மூலமாக தேர்வு காணவே நாம் முயற்சித்து வருகின்றோம்.

 அணைத்து காரணிகளிலும் முட்டி மோதிக்கொண்டு செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.