அரசியலமைப்பை மீறிய ஜனாதிபதி  ஜனநாயகத்தை மதிப்பார் என்பதில் சந்தேகம்  - குமார  வெல்கம 

Published By: Daya

21 Dec, 2018 | 02:39 PM
image

( இராஜதுரை ஹஷான்)

 அரசியலமைப்பிற்கு  முரணாக  செயற்பட்ட ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயகத்தை மதிப்பார்  என்பது  சந்தேகத்திற்கிடமானது.  இவர்  தொடர்ந்து  ஜனாதிபதி  பதவியை வகிக்க  தகுதியற்றவர்.  ஆகவே  ஜனாதிபதி  தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பினையும், பொதுச்சட்டத்தினையும் முதலில் ஜனாதிபதி  மதிக்க வேண்டும்.  நாட்டு  தலைவரை பின்பற்றியே  நாட்டு  மக்கள் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.  சாதாரண பிரஜை  ஒருவர் அரசியலமைப்பிற்கு  முரணாக  செயற்படும் பொழுது அவர்  சட்டத்தால்  தண்டிக்கப்படுகின்றார். சட்டவாட்சி கோட்பாட்டை  ஜனாதிபதியும்  மதிக்க வேண்டும். அவர் மாத்திரம்  விதிவிலக்கல்ல.

 அரசியல் நெருக்கடியின் காரணமாக நாட்டில்  இடம் பெற்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு யார் தற்போது  பொறுப்பு கூறுவார்கள்.  இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்ற வேண்டிய அவசியம்  கிடையாது.  ஏனெனில் ஜனாதிபதியே அவரது விருப்பத்தின் ஊடாக இடைக்கால அரசாங்கத்தை  மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏற்படுத்தினார். ஆகவே இவற்றிற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும்.  அதற்கு  முன்னர் அவர் சுய  விருப்பின் பெயரில்  பதவி  விலக வேண்டும் . அல்லது  ஜனாதிபதி தேர்தலை நடத்த  முயற்சிக்க வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49