பந்துகள் உடலை தாக்கின நான் அசையாமல் உறுதியாக நின்றேன் - மத்தியுஸ்

Published By: Rajeeban

21 Dec, 2018 | 11:42 AM
image

நியுசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகள் உடலை தாக்கினேன் ஆனால் நான் உறுதியாக நின்றேன் என  இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ்  நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாவது இனிங்சில் தான் துடுப்பெடுத்தாடிய விதம் குறித்து தெரிவித்துள்ளார்

குசால் மென்டிசுடன் இணைந்து நான்காவது விக்கெட்டிற்காக ஆட்டமிழக்காமல்  267 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியமை குறித்து மத்தியுஸ் பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் ஆக்ரோசமாக பந்து வீசினார்கள் எங்களது உடல்களை குறிவைத்து பந்து வீசினார்கள் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

அந்த பந்துகளை தொடாத வரை நான் ஆட்டமிழக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியும் என தெரிவித்துள்ள மத்தியுஸ் பந்துகள் உடலை தாக்கியபோதிலும் நான் உறுதியாக நிலைத்து நின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அது என்னை காயப்படுத்தும் ஆனால் என்னை ஆட்டமிழக்கச்செய்யாது என்பது எனக்கு தெரிந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியுசிலாந்தின் பந்து வீச்சாளர்களிற்கும் நான் அதே செய்தியையே தெரிவிக்க விரும்பினேன்  நீங்கள் எனது உடலை இலக்குவைத்து பந்து வீசலாம் பவுன்சர்களை வீசலாம் ஆனால் நான்  இலகுவில் ஆட்டமிழக்க மாட்டேன் என்ற செய்தியை  நியுசிலாந்து அணிவீரர்களிற்கு தெரிவி;க்க விரும்பினேன் என மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது நான் மாலையில் இலங்கை அணிக்கு அது மிகவும் முக்கியமான தருணமாக காணப்பட்டது நானும் குசால் மென்டிசும் நிலைத்து நின்று விளையாட தீர்மானித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சிறிய சிறிய காயங்கள் பல ஏற்பட்டன ஆனால் அவை அனைத்தும் பயனுள்ளவை  எனவும் மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49