ஜேர்மனியின் விமானநிலையத்தை படம்பிடித்த மர்மநபர்கள்- பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு

Published By: Rajeeban

21 Dec, 2018 | 10:55 AM
image

பயங்கரவாத தாக்குதல் எவ்வேளையிலும் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர்.

ஜேர்மனியின் ஸ்டட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நால்வர் நடமாடிய சம்பவத்தை தொடர்ந்த அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தந்தை மகன் உட்பட நால்வரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் இருவர் விமானநிலையத்தை புகைப்படமெடுத்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஜேர்மனியின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தையும் மகனும் விமானநிலையத்தை படம்பிடிப்பது கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது அதன் பின்னர் அவர்கள் காணாமல்போயுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோவின் புலனாய்வு பிரிவினரே தந்தை மகன் குறித்த பெயர் விபரங்களை  வெளியிட்டுள்ளனர் என ஜேர்மனியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10