குள்ளமான மனிதர்களின்  உயரத்தை  அதிகரிக்கும் சிகிச்சை?

Published By: Daya

21 Dec, 2018 | 09:25 AM
image

உலகில் பிறக்கும் மனிதர்களின் சராசரி உயரம் ஐந்து அடிக்குமேல் என்று அண்மைய ஆய்வு கூறுகிறது.

ஒவ்வொரு மனிதரின் வளர்ச்சிக்கும் அவர்களின் மூளையிலுள்ள பிற்யூற்றரி சுரப்பியில் ஏற்படும் சமச்சீரான சுரப்புகளே காரணம்.

இந்நிலையில் இந்தபிற்யூற்றரியின் சுரப்பில் சில தருணங்களில் ஏதேனும் இடையூறுகளோ அல்லது தடங்கலோ ஏற்பட்டால் அவர்கள் Dwarfism எனப்படும் உயர வளர்ச்சி குறைபாடு என்னும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.இவர்கள் தங்களின் வாழ்நாளில் வளர்ச்சிக்கான இரண்டு பருவங்களையும் சேர்த்து மூன்று அடி உயரம் மட்டுமே வளர இயலும். இதற்கு மேல் இவர்களின் வளர்ச்சியிருக்காது. வைத்திய துறையும் இவர்களை மாற்றுதிறனாளிகள் என்று அங்கீகரிக்கிறது.

இவர்கள் தங்களின் உயரத்தை மேம்படுத்துவதற்கான சிகிச்சையைக் குறித்து தொடர்ந்து வைத்திய துறையினரிடத்தில் கேள்விஎழுப்பி வருகிறார்கள்.மனிதர்கள் உயரமாக வளர்வதற்கு அவசியமான புரதசத்து நிறைந்த உணவு வகைகளான சோயா, முட்டை, பாசிபயறு ஆகியவற்றை கொடுக்கலாம். இவற்றால் நேரடியாக பலன் இல்லை என்றாலும், அதனைத்  தூண்டிவிடும் காரணிகளாக இருக்கின்றன.

சிலர் உயரமாக வளரலாம் என்று கூறி ஹோர்மோன் ஊசிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய ஊசி எதிர்பார்த்த பலனை முழுமையாக தராது என்பவற்றுடன், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

அதனால் குள்ளமாக பிறந்து விட்டாலோ அல்லது இருபத்தி மூன்று வயதுவரை மூன்றடி உயரம் மட்டுமே வளரமுடிந்தால் நீங்கள் துவர் ஃபிஸம் என்ற உயர வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் எம்முடைய மனதில் அழுத்தமான எண்ணத்தை பதிவுசெய்து கொள்ளவேண்டும்.

இது நேர்மறையான உளவியல் சிகிச்சைத் தான். இதனை உறுதியாக பின்பற்றினால்,இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு  வைத்திய ரீதியிலான நிவாரணம் இருக்கிறதே தவிர, தீர்வு இல்லை என்பதையும் உணரவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04