ரஷ்ய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி: இரு நாடுகளிடையே பதற்றம்

24 Nov, 2015 | 06:09 PM
image

துருக்கி-சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய நாட்டு இராணுவ போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்தால் ரஷ்யா-துருக்கி இடையே மோதல் போக்கு உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ எடுத்து ஒளிபரப்பியுள்ளது. 

ரஷ்ய நாட்டு இராணுவத்தின் சுகோய்-24 வகை விமானம் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழுவது அந்த காட்சிகளில் உள்ளது. 

துருக்கி வான் எல்லைக்குள் குறித்த விமானம் அத்துமீறி நுழைந்ததாகவும், எனவே துருக்கி இராணுவம், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

விமானம் வீழ்த்தப்பட்டபோது, விமானி தப்பிவிட்டதாக  தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும், அதில் இன்னும் உறுதியற்ற நிலை காணப்படுகிறது. 

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எந்த நாட்டுடையது என்பது முதலில் மர்மமாக இருந்தது. சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல நாட்டு படைகளும் போர் புரிந்துவருகின்றன. 

எனவே இது எந்த நாட்டு போர்விமானமாக இருக்கலாம் என்ற குழப்பம் நீடித்திருந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அது தங்கள் நாட்டு விமானம் என்று அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சு கூறுகையில், "துருக்கி இராணுவத்தால் வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் சுகோய்-24 வகை போர் விமானம். ரஷ்யா அத்துமீறி துருக்கி எல்லைக்குள் நுழையவில்லை. விமானம் சுடப்பட்டபோது, ரஷ்ய விமானம், 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் இருந்த விமானிகள் கீழே குதித்துவிட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை"   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47