அமைச்சரவை விபரங்கள் இதோ !

Published By: Vishnu

20 Dec, 2018 | 11:05 AM
image

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

அத்துடன் மங்கள சமரவீர நிதிமற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகவும், லக்ஷ்மன் கிரியெல்ல அரச விவகாரம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், ரவூப் ஹக்கீம் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராகவும், திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராகவும், ராஜித சேனாரத்ன சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சராகவும், ரவி கருணாநாயக்க மின்சாரம் மீள் புதுப்பிக்கத்தக்க அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். 

மேலும் வஜிர அபேவர்தன உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும், ரிஷாத் பதியூதின் கைத்தொழில் வணிக விவகார அமைச்சராகவும், பட்டாலி சம்பிக்க ரணவக்க நகர திட்டமிடல் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும், நவீன் திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராகவும், பி.ஹரிஸன் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும், ரஞ்சித் மத்தும பண்டார அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும், கயந்த கருணாதிலக்க காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராகவும், சஜித் பிரேமதாஸ வீடமைப்புத்துறை மற்றும் கலாசார அமைச்சராகவும், அர்ஜூண ரணதுங்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும், பழனி திகாம்பரம் மலை நாட்டுப் புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சராகவும், சந்திராணி பண்டார மகளிர் விவகார மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

அத்துடன் தலதா அத்துக்கோரள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும், அகிலவிராஜ் காரியவசம் கல்வி அமைச்சராகவும், அப்துல் ஹலீம் மொஹமட் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும், சகால ரத்னாயக்க துறைமுகங்கள் மற்றும் தென்மாகாண பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும், ஹரீன் பெர்னாண்டோ தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனோகணேசன் தேசிய நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராகவும், தயாகமகே தொழிலுறவு அமைச்சராகவும், மலிக் சமரவிக்ரம சர்வதேச வர்த்தக முதலீட்டு அமைச்சராகவும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார். 

எனினும் இந்த சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கான அமைச்சர் இதன்போது நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01