ராகுலுக்கு தி.மு.க.வின் ஆதரவு ; வருங்கால போக்கிற்கு ஒரு சமிக்ஞை

Published By: Daya

19 Dec, 2018 | 09:58 PM
image

வருட இறுதிப் பரிசாக இதைவிட வேறு எதையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேட்டிருக்க முடியாது. மூன்று முக்கிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி தந்த உற்சாகத்தையடுத்து, காங்கிரஸின் தற்போதைய நேசக்கட்சிகளும் வரும் நாட்களில் நேச அணிகளாக மாறக்கூடிய கட்சிகளும் எதிர்வரும் 2019 பொதுத்தேர்தலுக்கான அவற்றின் நிலைப்பாடுகளை திடீரென்று மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன. சென்னையில் கடந்த ஞாயிறன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட வைபவத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிலான அணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியதையும் அதை தனது கட்சி முழுமையாக ஆதரிக்கும் என்றும் அறிவித்தார். ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதற்கு தி.மு.க.முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் என்று கூறிய ஸ்டாலின் அவரின் தலைமைத்துவத்தை வெகுவாகப் பாராட்டினார். இந்தியாவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தியின் பாட்டியார் இந்திரா காந்திக்கு தனது தந்தையார் விடுத்த அழைப்புடன் சமாந்தரம் வரைந்த தி.மு.க.தலைவர் இன்றைய சூழ்நிலையும் அதையொத்ததே என்று குறிப்பிட்டார்.

      

கர்நாடக மாநிலத்தில் கூட்டணி அரசாங்கத்தின் இருப்புக்கு காங்கிரஸில் தங்கியிருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் அல்லது பீஹாரில் எல்லாச் சூழ்நிலைகளிலும் காங்கிரஸின் நேச அணியாக இருந்துவரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தைத் தவிர இதுவரையில் வேறு எந்த முக்கியமான  கட்சியும் எதிரணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. உண்மையில், பிரதமர் பதவிக்கு வரவேண்டுமென்ற அபிலாசையைக் கொண்டிருக்கும் மேற்கு வங்க முதலமைச்சரான திரிநாமுல் காங்கிரஸ் தலைவி  மமதா பானர்ஜி மற்றும் ஆந்திரப்பிரதேச முதலமைச்சரான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு போன்ற முக்கிய எதிரணி தலைவர்கள் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாத்திரமே பிரதமர் பதவிக்குரியவர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்று அடிக்கடி கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், 40 லோக்சபா தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் வல்லமைகொண்ட ஸ்டாலின் போன்ற பலம்பொருந்திய மாநிலத் தலைவர் தானாகவே முன்வந்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது காங்கிரஸ்காரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

        

இதுவரையில் பிரதமர் பதவிக்கு மாற்றுத்தெரிவாக இந்தியா பூராவும் செல்வாக்குக்கொண்ட ஒரு தலைவர் இல்லாதிருப்பதே பிரதமர் மோடியும் அவரது பாரதிய ஜனதாவும் அனுபவித்துக்கொண்டிருக்கும் முக்கிய அனுகூலங்களில் ஒன்று. இந்திமொழி பேசும் மூன்று முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த வாரம் கிடைத்திருக்கும் வெற்றியை அடுத்து பிரதமர் பதவிக்கான மாற்றுத் தலைவராக ராகுல் காந்தியை முன்னிறுத்தமுடியும் என்ற நம்பிக்கை  காங்கிரஸுக்கு நிச்சயமாக ஏற்படும். அரசியலில் ஐந்து மாதங்கள் என்பது ஒரு நீண்டகாலமே, ஆனால் கடந்த சில மாதங்களாக கட்டியெழுப்பிய இயங்குவிசையையும் உத்வேகத்தையும் மேலும் தீவிரப்படுத்துவதில் காங்கிரஸ் அக்கறைகாட்டும். தி.மு.க. தலைவர் காட்டியிருக்கும் சமிக்ஞையை மேலும் பல எதிரணிக்கட்சிகள் பற்றிக்கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பாரக்கும் என்று கூறமுடியும்.

( இந்துஸ்தான் ரைம்ஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21