கடந்த 48 மணிநேரத்தில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

Published By: Daya

19 Dec, 2018 | 04:22 PM
image

 (இரோஷா வேலு)

நாட்டின் இருவேறு பகுதிகளில் கடந்த 48 மணிநேரத்திற்குள் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. 

இந்த இரு துப்பாக்கிச் சூட்டின் போதும் காயங்களுக்குள்ளான இரண்டு நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது. 

அதன்படி, பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடமான்ன கொங்கஸ் சந்தியில் வைத்து வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதன்போது காயங்களுக்குள்ளான நபர் அத்போடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் மஹஹீல்ல பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 

இச்சம்பவமானது செவ்வாய்கிழமை இரவு 8.35 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்பட்டிருக்கவில்லை. எனினும் பெலியத்த பொலிஸாரால் சம்பவத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் சீதுவ பகுதியிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் இருதரப்பிடையே இடம்பெற்ற முரண்பாட்டின் காரணமாக களியாட்ட விடுதி உரிமையாளரினால் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட நிலையில் விடுதிக்கு வந்திருந்த நபரொருவர் காயங்களுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதன்போது ரத்தொழுவ சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். 

இச்சம்பவமானது இன்று அதிகாலை 2.30 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் சீதுவ பொலிஸ் பிரிவுக்குடப்ட்ட அரலிய மாவத்தை, லியனகேமுல்ல பகுதியில் அமைந்துள்ள தனியார் களியாட்ட விடுதியொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. 

விடுதிக்கு களியாட்ட நிகழ்வுக்காக வருகை தந்திருந்த குழுவொன்று விடுதியில் பணியாற்றும் பணியாளர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய வேளையில் சம்பவத்தின் போது விடுதியின் உரிமையாளரினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

எனினும் சம்பவத்தையடுத்து விடுதியின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் சீதுவ பொலிஸார் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58