உலகசாதனை நாயகன் கட்டழகர் நாடு திரும்பினார் 

Published By: Daya

19 Dec, 2018 | 04:05 PM
image

இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார்.

சாம்பியன்ஷிப்பின் உலக கட்டழகராக லூசியன் புஷ்பராஜ் நேற்று இரவு நாடு திரும்பினார்.

உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு சாம்பியன்ஷிப் 2018  ஆம் ஆண்டிற்கான போட்டிகள் டிசம்பர் 14 ஆம் திகதி ஆரம்பித்து 16 ஆம் திகதிவரை தாய்லாந்தின் பாங்கொக் நகரில் "சியாங் மாய்"  இல் இடம்பெற்றது.

இப் போட்டியில் 52 நாடுகள் பங்குபற்றியதுடன் 600 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

சலக போட்டியாளர்களையும் தோற்கடித்து 100 கிலோ கிராம் நிறைகொண்ட  பளுதூக்கி வெற்றியை லூசியான் புஷ்பராஜ் தனதாக்கி கொண்டார். 

”ஆசியாவின் கறுப்பு சிங்கம்” என்ற நாமத்தில் லூசியான் புஷ்பராஜ்  விசேட வெற்றியினை தனதாக்கிக் கொண்டார். இலங்கை விளையாட்டு வீரரினால் இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது விசேட அம்சமாகும். 

குறித்த வெற்றிக்கான கிண்ணத்தை பெற்று கொண்டு நேற்று இரவு 10.50 மணியளவில் தாய்லாந்து பாங்கொக் நகரிலிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய லூசியான் புஷ்பராஜை வரவேற்பதற்காக  மனைவி, பிள்ளைகள் உட்பட பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், இலங்கை பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் இலங்கை உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு கட்டுப்பாட்டு சம்மேளனத்தின் ஏனைய அதிகாரிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தின் விசேட விருந்தினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு மத்தியில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35