பலாங்கொடையில் இருந்து கண்டி திகன பகுதிக்கு சென்ற பாரவூர்தி ஒன்று இன்று விடியற் காலை 2 மணியளவில் வீதியை விட்டுவிலகி 400 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

பலாங்கொட ஹட்டன் பிரதான வீதியின் பொகவந்தலாவ பொற்றோசோ தோட்ட பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலாங்கொடையில் இருந்து கண்டி திகன பகுதியை நோக்கி சென்ற பாரவூர்தியும் ஹட்டனில் இருந்து பலாங்கொடை பகுதியை நோக்கி சென்ற ஜிப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிய நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த ஜிப் வண்டி இலக்க தகடு பொறுத்தப்படாத நிலையில் அதிக வேகத்தோடு வந்தமையினாலே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தின் ஊடாக சாரதிக்ககு எவ்வித காயங்களும் எற்படவில்லையெனவும் பெருமலவிலான சேதம் பாரவூர்திக்கு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்ப்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர்