வலைத்தளங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் விசித்திரக் கிளி

Published By: Vishnu

19 Dec, 2018 | 12:03 PM
image

ஆபிரிக்காவின் ரொக்கோ எனப்படும் ஒரு வகையான கிளி, தன் முதலாளியின் குரலைப் போன்று பேசி அமேசன் அலெக்ஸா வலைத்தளத்தில் தனக்குத் தேவையான பழங்கள், காய்கறி வகைகளை முன்பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. 

குறித்த ரொக்கோ கிளிக்கு அசாதாரணமான பேச்சு திறன் உள்ளது. ஆனால் இந்தக் கிளியின் இத்தகைய அசாதாரண திறமையினாலேயே அதனை பெர்க்‌ஷயரிலுள்ள தேசிய விலங்கு நல அறக்கட்டளை சரணாலயத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றவேண்டிய நிலையம் ஏற்பட்டது.

குறித்த செல்வோரை கெட்ட வார்த்தைகளால் ஏசி அதில் மகிழ்ச்சி கண்டுள்ளது இந்த ரொக்கோ கிளி.  இதனாலேயே அதனை இடம்மாற்றம் செய்யவேண்டிய தேவையேற்பட்டது.

ரொக்கோ கிளிக்கு மாற்றப்பட்ட புதியஇடம் அதற்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த அமேசான் அலெக்ஸாவுடன் தொடர்புகொண்டு தனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் முன்பதிவு செய்துள்ளது.

ரொக்கோ, கிளி, அமேசன், அலெக்ஸா

ஐஸ் கிரீம் வகைகள், நீர் பூசணிக்காய், உலர்ந்த திராட்சைகள் என்பவற்றை முன்பதிவு செய்து சாப்பிட்டுள்ளது.  ஒருமுறை லைட் பல்ப், பட்டம் ஆகியவற்றையும் குறித்த கிளி கொள்வனவு செய்துள்ளது.

அண்மையில், அமேசான் கணக்கு வைத்திருக்கும் கிளியின் உரிமையாளர் இதன் சேட்டைகளைக் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right