சமநிலையில் முடிந்தது முதல் போட்டி

Published By: Vishnu

19 Dec, 2018 | 11:00 AM
image

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வயின்றி முடிவுக்கு வந்துள்ளது.

இவ் விரு அணிகளுக்கிடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை வெலிங்டகனில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 282 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களையும் பெற்றது.

இதன் பின்னர் 296 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை குவித்தது.

சிறப்பாக ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் 116 ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 117 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இலங்கை அணிக்கு வலு சேர்த்தனர்.

போட்டியின் இறுதியும் ஐந்தாவதும் நாளான இன்று 259 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்த நிலையில் துடுப்பெடுத்தாடி வர மழை குறுக்கிட்டது. 

தொடர்ந்தும் மழை விடாது பெய்த காரணத்தினால் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது.

மெத்தயூஸ் 120 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 141 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இவ் விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41