சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Published By: Digital Desk 4

18 Dec, 2018 | 05:03 PM
image

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட எட்டு சாரதிகள் கைது செய்யப்பட்டதோடு, மண் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய ஊழல் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான குழுவினர் இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களான அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளில் ஆற்று மண் மற்றும் கடல் மண் அகழ்வில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மண் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், இரண்டு சிறய ரக கென்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியமை மற்றும் நிபந்தனைகளை மீறிய வகையில் மணலை ஏற்றிச் சென்றமை ஆகிய குற்றங்களின் அடிப்படையிலேயே சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன் வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களுடன் அதன் சாரதிகள் அக்கரைப்பற்று நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார்; மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21