மகள் திரும்பி வரு­வாளா ? : கதறி அழும் தாய்

Published By: Raam

30 Mar, 2016 | 08:06 AM
image

ஓமந்தை,எனது இரண்டு மகன்­களை ஷெல்­வீச்சில் பலி­ கொ­டுத்த நான் மக­ளையும் காணாமல் தவிக்கின்றேன் என சிவ­பாதம் செல்­வ­ராணி என்ற தாயார் காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விடம் நேற்று கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

வவு­னியா பிர­தேச செய­ல­க­த்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற காணா­மல்­போனோர் தொடர்­பான விசா­ரணை மேற்­கொள்ளும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் அங்கு அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் 

நானும் என் கண­வரும் 05 பிள்­ளை­க­ளுடன் எனது சொந்த ஊரான நெல்­வே­லிக்­கு­ளத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்து சென்றோம். விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக இலங்கை இராணும் நடத்­திய யுத்­தத்தின் உக்­கி­ரத்தால் இடம் பெயர்ந்த நாம் அங்­கா­டிகள் போல் ஒவ்­வொரு இட­மாக இடம்­பெ­யர்ந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­காலை அடைந்தோம். அங்கு எமது உயிரை பாது­காக்க எண்­ணிய போதும் செல் தாக்­கு­தலில் அகப்­பட்டு என் இரு ஆண் பிள்­ளை­களை இழந்தேன்,

செல் வீச்சில் சித­றிய என் பிள்­ளை­களை எண்ணி அழு­வதா என் ஏனைய பிள்­ளை­களை காப்­பதா என்ற மரண போராட்­டத்தின் மத்­தியில் என் எஞ்­சிய பிள்­ளைகள் மற்றும் சக­வீ­ன­மான என் கண­வ­ருடன் உக்­கிர செல் அடி­யிலும் உயிரை காக்க முற்­பட்டேன்.

இந் நிலையில் நாம் ஒடிய போது செல் உக்­கி­ரத்தில் என் குடும்பம் சித­ற­டிக்­கப்­பட்டு இறு­தி­யாக எல்­லோரும் இணையும் போது என் மகளை தவ­ற­விட்டு விட்டேன்.

என் மகள் என்­னி­டத்தில் வந்து சேர்வாள் என்­றெண்ணி நந்­திக்­க­டலின் மிதந்து கிடக்கும் சிறு குழந்­தைகள் மற்றும் ஏனைய உடல்­களின் நடுவில் சிறு மண் திட்டில் ஒர் இர­விலும் பக­லிலும் காத்­தி­ருந்தும் பயனில்லாமல்போய் விட்டது.

என் மகள் திரும்பி வர மாட்டாளா என்றெண்ணி ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன், தற்போது எனக்கு நெஞ்சு நோய் ஏற்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54