யாழில் இடம்பெற்ற கொள்ளை, குண்டுத்தாக்குதல் ; பொலிஸாரிடம் சிக்கியது கும்பல் 

Published By: R. Kalaichelvan

18 Dec, 2018 | 11:22 AM
image

யாழில் வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹைஏஸ் வேன் ஒன்றும், மோட்டார் சைக்கிள் மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை இரவு ஆரம்பமாகி இன்று அதிகாலை வரை முன்னெடுக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் அரியாலை, மானிப்பாய், மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்  பொலிசார் தெரிவித்தனர். 

புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற கொள்ளை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். விசாரணையின் பின்னரே முழுமையான விபரங்களை வெளியிட முடியும் எனவும் சந்தேகநபர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவாரகளென  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30