முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை

Published By: R. Kalaichelvan

18 Dec, 2018 | 10:26 AM
image

முல்லைத்தீவு துணுக்காய்  தேறாங்கண்டல் பகுதியில்  காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனால் பெருமளவான பயிரழிவுகள் ஏற்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேறாங்கண்டல்  பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பயிர் செய்கை நிலங்கள் ஆகியவற்றுக்குள் தொடர்ச்சியாக காட்டுயானைகள் உட்புகுந்து பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது மாலை 6.00 மணிக்குபின்னர்  ஊர் மனைகளுக்குள்ளும்,பயிர்ச் செய்கை நிலங்களுக்குள்ளும் புகும் காட்டுயானைகள் நெற் பயிர்களையும் ஏனைய மரவள்ளி பூசனி போன்ற தோட்டப்பயிர்களையும் அழித்து வருகின்றன.

நேற்றைய தினம் இரவு  ஊர்மனைக்குள் புகுந்த காட்டுயானைகள் பெரும் பயிரழிவுகளை  ஏற்படுத்தியுள்ளன.

 கடந்த காலங்களில் இவ்வாறான யானைகளின் தாக்கங்கள் கடந்த காலங்களில் இல்லை என்றும் அண்மைய நாட்களாகவே இவ்வாறு யானைகளின் பாதிப்பு அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44