ஒட்டுசுட்டான் வாகன விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்

Published By: R. Kalaichelvan

19 Dec, 2018 | 10:54 AM
image

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14 ம் திகதி  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன்  சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது உறவினருடன் ஒட்டுசுட்டான் சுற்றுவட்டவீதியில்  மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் எதிரே வந்துகொண்டிருந்த பஸ்ஸில்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த  இருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.மோட்டார் சைக்கிளை ஓட்டிய குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி  நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். 

விபத்தில் நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று, இம்முறை க.பொ.த  சாதாரண பரீட்சை எழுதிய நாகராசா மதுசன் என்ற மாணவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01