தலைக்கனம் பிடித்தவனே - ஆடுகளத்தில் கோலியைப் பார்த்து பெய்ன்

Published By: Vishnu

17 Dec, 2018 | 05:22 PM
image

பெர்த்தில் இடம்பெற்று வரும் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையோயன இரண்டாவது போட்டியின் போது டிம் பெய்ன் மற்றும் விராட் கோலிக்கிடையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

போட்டியின் மூன்றாவது நாளான நேற்றைய தினம் பும்ரா வீசிய பந்தை பெய்ன் எதிர்கொண்டார். அப்போது அவரின் கால் காப்பின் (பேட்) அருகே பந்து சென்று ரிஷப் பந்த் தடுத்தார். 

உடனே விராட் கோலி, ரிஷப்பந்த், பும்ரா அனைவரும் நடுவரிடம் சத்தமாக ஆட்டமிழப்பு குறித்து முறையீடு  செய்தனர். ஆனால் நடுவர் குமார் தர்மசேனா ஆட்டமிழப்பை வழங்கவில்லை. 

இதனையடுத்து பெய்னும், கோலியும் ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர்.

அதவாது இதன்போது விராட் கோலி "நீ ஆட்டமிழந்துவிட்டால், தொடர் 2-0 என்று வென்றுவிடுவோம்" எனவும், அதற்கு பெய்ன்  "வேண்டுமென்றால் முதலில் நீங்கள் துடுப்பெடுத்தாடி இருக்கலாம் தான‍ே, தலைக்கனம் பிடித்தவனே" எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினமும்  71 ஆவது ஓவரை பும்ரா வீசினார். அப்போது களத்தடுப்பாளர்கள் பெய்னுக்கு அருகே நிற்குமாறு விராட் கோலி மாற்றி அமைத்தார். இதைப் பார்த்த பெய்ன், விராட் கோலியிடம் ஏதோ கூற இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் உச்ச நிலையை எட்டியபோது இரு அணித் தலைவர்களும் மார்போடு உரசிக் கொள்ளும் வகையில் நெருக்கமாக நின்று பேசினார்கள்.

இதபை் பார்த்த போட்டியின் நடுவர் இருவரையும் பிரிந்து செல்லுமாறு குமார் தர்மசேன எச்சரிக்கை விடுத்தார்.

அதற்கு பெய்ன், “ நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். வாக்குவாதம் செய்யவில்லை. கூலாக இருங்கள் விராட்” என்று கிண்டலாகத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21