“பகிடி” வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக்குத்துவாக மாறி ஒருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில்நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

 இச்சம்பவத்தில் பி.கே. அமரசேக்கர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தரே பலியானவராவார்.

 இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையடுத்து, கொஸ்லந்தையைச் சேர்ந்த ஏ. சுப்ரமணியம் என்பவரைக் கைது செய்துள்ளனர். அத்துடன் அந் நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டது.

கொஸ்லந்தை அரசினர் மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கமைய, கத்தியினால் குத்தியமையினாலேயே, மரணம் சம்பவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், தொடர்ந்து விசாரணைகளில் கொலையென ஊர்ஜிதமாகியுள்ளது.

 இக்கொலையைத் தொடர்ந்து, பெரும் பதட்ட நிலையும், இனமுறுகலும் கொஸ்லந்தையில் ஏற்பட்டுள்ளன.  பொலிஸ் பாதுகாப்பு நகரில் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

(க.கிஷாந்தன்)