மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

17 Dec, 2018 | 03:17 PM
image

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இன்று  காலை சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது.

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமையில் இருந்து நேற்றைய தினம் வரை இடம் பெறவில்லை.

கடந்த புதன்கிழமை (12)  116 ஆவது நாளாக இடம் பெற்ற அகழ்வு பணி மற்றும் அளவிடும் பணிகளுக்கு பின்னர்  அகழ்வு பணி  இடம் பெறவில்லை.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றமையினால் இடம் பெறாதிருந்த அகழ்வு பணியனது இன்று  திங்கட்கிழமை  117 ஆவது  நாளக மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 குறித்த புதை குழியில் இருந்து  இது வரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்  உற்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள்  முழுவதையும் அப்புறப்படுத்தும் பணிகள் அதிகளவில் இடம் பெற்றது.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடை பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45