4400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 4

16 Dec, 2018 | 04:30 PM
image

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான மதத்தலைவரின் கல்லறை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் பாலைவனப் பகுதிகளில் பிரமீட்டுகள் மற்றும் சடலங்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மம்மி எனப்படும் கல்லறைகள் பரவலாக காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னோர்களின் நினைவாக இந்த கல்லறைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான கெய்ரோ அருகே உள்ள சக்காரா பிரமிட் அருகே சுமார் 4400 ஆண்டுகள் பழைமையான ஒரு மதத்தலைவரின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கல்லறையில் வண்ணமயமான எழுத்தோவியங்கள், பண்டையகாலத்து அரசர்களின் உருவங்கள், இறந்த மதத்தைலைவர்  மற்றும் அவரது குடும்பத்தாரை அடையாளப்படுத்தும் ஓவியங்கள் என்பன காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right