மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி, நவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்துள்ளனர்.

இச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணை குறித்த பகுதிக்கு ஒன்றிற்காக இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர் . இந்த நிலையில் பொலிசார் விசாரணையில் ஈடுபட்ட முற்பட்டபோது மூவர் பொலிசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடியுள்ளனர் .

இதில் படுகாயமடைந்த இரு பொலிசாரும் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24, 30 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் ரூபன் என்று அழைக்கப்படும் மற்றவர் தலைமறை வாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.