தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா:அனந்தி சசிதரன்

Published By: R. Kalaichelvan

15 Dec, 2018 | 12:38 PM
image

ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போதுநீதி மன்றம் ஊடாக நீதி கிடைத்துருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும்  நீதி மன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் கேள்வியொழுப்பியுள்ளார். 

தற்போதைய சமகால அரசியல் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார் இது தொடர்பில் மேலும்அவர் தெரிவிக்கையில் 

நாட்டில் ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகதம்பட்டம் அடிக்கின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்ற போது அதனைத் தீர்ப்பதற்கு ஏன் நீதி மன்றம் செல்லவில்லை. 

தமிழ் மக்களுடைய பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருக்கின்றது. நீதிக்காக இன்றைக்கும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால்  தமிழ்மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ நிதிக்காகபோராடும் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஆனால் ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக எனக் கூறி ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் சென்றனர். இப்போது நீதியும் கிடைத்து உள்ளதாகவும் கூறுகின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்கள்விடயத்தில் ஏன் அவ்வாறு செயல்படவில்லை. 

இன்றைய அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் கடும்விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகையினால் கூட்டமைப்பின் வகிபாகம்நிச்சயம் இவர்களது முகத்திரையைக் கிழித்துள்ளதாகவும்  தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதாக எங்கள்  மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எங்களை துரோகிகளாக சித்தரிக்கின்றவர்கள் தங்களை சுய மதிப்பீடு செய்து பார்க்கவேண்டு மென்றும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11