மஹிந்தவுக்கு மற்றுமொரு ஏமாற்றம் ! தடை நீக்க மறுத்தது நீதிமன்றம்

Published By: Vishnu

14 Dec, 2018 | 06:12 PM
image

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் அவர்கள் தமது அதிகாரங்களை செலுத்த முடியதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிகார மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் 121 பாராளுமன்ற  உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றால் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11