இன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிரடி அறிவிப்பு : நீதியரசர் ஈவா வனசுந்தர எடுத்த தீர்மானம்

Published By: Vishnu

14 Dec, 2018 | 02:29 PM
image

உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி. ஈவா வனசுந்தர நீதியரசர் சேவையிலிருந்து இன்று ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றின் 502 ஆம் இலக்க அறையில் இன்று இடம்பெற்ற விசாரணை அமர்விலேயே, உயர்நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹார இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு  மேன் முறையீட்டு நீதிமன்றம்  விதித்துள்ள இடைக்கால தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.  தாக்கல் செய்த விஷேட மேன் முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட இந்த விஷேட மேன் முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர் ஈவா வனசுந்தர உள்ளடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு பரிசீலித்து வருகின்றது.

 எனினும் இந்த  விஷேட மேன் முறையீட்டின் மனுதாரரான மஹிந்த ராஜபக்ஷ தனது நெருங்கிய நண்பர் என நீதியரசர் ஈவா வனசுந்தர என்று பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்படி இருக்கையில் அவர் இந்த மனுவை விசாரிப்பது நியாயமான விசாரணை ஒன்றாக அமையாது. எனவே அவர் இல்லாத ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழுவொன்றினை இந்த விஷேட மேன் முறையீட்டுக்காக நியமிக்கவும் என அந்த மேன்முறையீட்டு நீதிமன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் நீதிமன்றுக்கு கோரிக்கை விடுக்கபட்டிருந்தது.

எனினும் இந்த விஷேட மேன் முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர் ஈவா வனசுந்தர உள்ளடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் விசாரித்து வருகின்றனர்

இவ்வாறான பின்னணியிலேயே நீதியரசர் ஈவா வனசுந்தர இன்றுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இன்று மாலை வெளியாக உள்ள  மேன் முறையீட்டு தொடர்பான நீதிமன்றின் அறிவிப்பு இலங்கை அரசியலை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33