"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது" 

Published By: Vishnu

14 Dec, 2018 | 11:40 AM
image

எதிர்வரும் திங்­கட்கிழமையன்று புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும். ஜனா­தி­ப­தி­யாக நாம் தொடர்ந்து செயற்­ப­டுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் ஜனா­தி­பதியாக நான் இருக்கும் வரையில் ரணி­லுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­லேயே நான் செயற்­ப­டுவேன். ஆனால், ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ள­வி­ரும்­பு­ப­வர்கள் அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளலாம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

இந்த நிலையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட்டம் நேற்­றி­ரவு இடம்­பெற்­றது. இந்தக் கூட்­டத்­தின்­போது ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது. 

அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் இணைந்து கொள்ள விரும்­பினால் அவர்­களை ஏற்­றுக்­கொள்­வது என்றும் ஆனால், கடந்த காலங்­களை போன்று சம அந்­தஸ்து கோர முடி­யாது என்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தொடர்ந்தும் விமர்­சிப்­ப­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்றும் இங்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­திரக் கட்­சி­யினர் ஒரு குழு­வாக வரு­வார்­க­ளாயின் அவர்­களை புதிய கூட்­ட­ணியில் இணைத்து கொள்­வ­தற்கும் இந்தக் கூட்­டத்தில் உடன்­பாடு காணப்­பட்­டது. ஆனாலும், சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எஸ்.பி.திஸா­நா­யக்க, டிலான் பெரேரா, திலங்க சும­தி­பால ஆகி­யோரை மீளவும் அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு இந்தக் கூட்­டத்தில் பெரும்­பா­லானா உறுப்­பி­னர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

எதிர்­வரும் 17ஆம் திகதி திட்­ட­மிட்­ட­படி கொழும்பில் ஆர்ப்­பாட்­டத்­தினை நடத்­து­வது என்றும் அதற்குள் அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அதனை வெற்றிக் கொண்­டாட்­ட­மாக மேற்­கொள்­வது என்றும் அர­சாங்கம் அமைப்­ப­தற்கு ஜனா­தி­பதி அனு­ம­தி­ய­ளிக்­காது இழுத்­த­டிப்­புக்­களை மேற்­கொண்டால் ஜனா­தி­பதி செய­ல­கத்தை சுற்றி வளைக்கும் வகை­யி­லான ஆர்ப்­பாட்­ட­மாக அதனை மேற்­கொள்­வது என்றும் இங்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை, நேற்று நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான கூட்­டத்தில் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மிக்­கப்­போ­வ­தில்லை என்று ஜனா­தி­பதி தெரி­வித்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் யாப்பா அபே­வர்த்­தன ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு ஜனா­தி­பதி கருத்து கூற­வில்லை என்று சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ருக்கு தகவல் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

திங்­கட்­கி­ழமை அர­சாங்கம் அமை­யு­மென்றும் சுதந்­திரக் கட்­சியில் விரும்­பி­ய­வர்கள் அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளலாம் என்றும் மஹிந்த தரப்­புடன் இணைந்து செயற்­பட விரும்­பு­ப­வர்கள் அவ்­வ­கையில் செயற்­ப­டலாம் என்றும் ஜனாதிபதி கூறியதாக சுதந்திரக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பிரதமர் தணித்து முடிவுகளை எடுக்காது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் குழுவாக செயற்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகின்றது. இந்த விடயம் குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27