மஹிந்தவின் மேன்முறையீடு இன்று பரிசீலனை

Published By: Vishnu

14 Dec, 2018 | 08:47 AM
image

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிர­தமர் பத­வி­யிலும் அமைச்சர் பத­வி­யிலும் கட­மை­களை முன்­னெ­டுக்க தனக்கு  மேன் முறை­யீட்டு நீதி­மன்றம்  விதித்­துள்ள இடைக்­கால தடையை நடை முறைப்­ப­டுத்­து­வதை தடுக்கும் முக­மாக உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி, மஹிந்த ராஜ­பக்ஷ   தாக்கல் செய்த விஷேட மேன் முறை­யீட்டை இன்று வெள்­ளிக்கிழமை பரி­சீ­ல­னைக்கு எடுக்க உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. 

அத்­துடன் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, சமல் ராஜ­பக்ஷ , தினேஷ் குண­வர்­தன  மற்றும் விஜே­தாஸ ராஜ­பக்ஷ ஆகி­யோரும் தாம்  அமைச்சுப் பத­வி­களில் தொடர விதிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால தடையை செயற்­ப­டுத்­து­வதை தடுக்கும் வகையில் உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி­யுள்ள விஷேட மேன் முறை­யீட்­டையும் அன்­றைய தினமே பரி­சீ­லிப்­ப­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. 

இவ்­விரு விஷேட மேன் முறை­யீ­டு­களும் நேற்றுமுன்தினம் முதல் முறை­யாக உயர் நீதி­மன்றின் 403 ஆம் விசா­ரணை அறையில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போதே பிரி­யந்த நீதி­ய­ரசர் பிரி­யந்த ஜய­வர்­தன தலை­மை­யி­லான பிர­சன்ன ஜய­வர்­தன , எல்.டி.பி. தெஹி­தெ­னிய ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழுவே இதனை அறி­வித்­தது.

இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07