வரலாற்று தீர்ப்பு ஐ.தே.க. கோலாகல கொண்டாட்டம் 

Published By: Digital Desk 4

14 Dec, 2018 | 10:18 AM
image

(இரோஷா வேலு)

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி கையளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பானது இன்றைய தினம் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்டது. 

ஜனாதிபதிக்கு பாராளுமன்றை கலைக்க அதிகாரம் கிடையாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதியரசர்கள் ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்றமே இந்த தீர்ப்பினை வழங்கியது. 

கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பு மனு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பானது இன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் மாலை ஐந்து மணிக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. 

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்து

வரலாற்று சிறப்பு மிக்க இத்தீர்ப்பினையடுத்து நாட்டில் கலவரம் தோற்றுவிக்கப்படாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததோடு, அளுத்கடை நீதிமன்ற பிரதேசமே கடும் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. 

நீதிமன்றுக்கு உள்நுழையும் இருமருங்கிலும் நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததோடு, கலகமடக்கும் பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டிருந்ததனர். அந்த வீதியினால் செல்வோர்களுக்கும் பொலிஸாரின் கெடுபிடிக்கள் அதிகமாகவே காணப்பட்டது. நீதிமன்ற பிரதேசத்தில் அநாவசியமான முறையில் தரித்திருந்த  அனைவரும் அகற்றப்பட்டனர். 

வீதி போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள் போடப்பட்டிருந்தது. நீதிமன்ற வளாகத்தினுள் வழக்குக்கு தொடர்புடையவர்களின் வாகனங்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டன. நீதிமன்ற வளாகம் பொலிஸாரினால் நிறைந்திருந்ததோடு, மோப்ப நாய்களும் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தினுள்ளும் வளாகத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இவ்வாறு இன்றைய தினம் பாரளுமன்றம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும், நீதியரசர்கள் குழாமிட்கும் பாதுகாப்பு அதிகரித்தே வழங்கப்பட்டிருந்தது. 

ஆதரவாளர்களின் நடவடிக்கை

ஜனாதிபதிக்கு பாராளுமன்றை கலைக்க அதிகாரம் கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்ற பிரதேசத்தில் பேரணியாக சென்றனர். இப்பேரணிகாரர்கள் ஜனாதிபதி மடையர், மனநோயாளி என திட்டி தீர்த்தவண்ணமே சென்றனர். 

வெற்றிக் கொண்டாட்டம் 

நீதிமன்ற தீர்ப்பையடுத்து குறித்த பகுதியில் அரை மணிநேரத்துக்கும் அதிகமாக பட்டாசு சத்தம் கேட்ட வண்ணமே காணப்பட்டது. வீதிமுழுவது பட்டாசு கொழுத்தப்பட்டிருந்தது. இதன்போது கொழும்பு மாநகரமே பாட்டாசு கொழுத்தி தமது சந்தோசத்தை தெரியப்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. அதனுடன் நீதிமன்றுக்கு வெளியே கேக் வெட்டியும், பால் சோறு ஊட்டியும் ஐ.தே.க ஆதரவாளர்கள் தமது வெற்றிக் களிப்பை கொண்டாடினர். கொழும்பு நகரமே இன்றைய தினம் கேக் வெட்டி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தது. 

நீதிமன்ற வளாகம் 

இந்த தீர்ப்பை நாட்டு மக்களுக்கு விரைவாக வழங்கும் நோக்குடன் உள்நாட்டு ஊடகங்களோடு, சர்வதேச ஊடகங்களும் ஆர்வமாக செயற்பட்டிருந்தன. சட்டக்கல்லூரி மாணவர்களும், சட்டத்தரணிகளும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக சர்வதேசத்தின் பார்வை முழுவதும் இன்றைய தினம் உயர் நீதிமன்றை நோக்கியதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22