நீங்கள் எந்த அணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பீர்கள் என்று ஊடகவியலாளர் கேட்டகேள்விக்கு நடிகர் ரஜனிகாந்த், இதற்கு பதில் கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜனிகாந்த் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி நோக்கி பயணமானார், இந்நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

 

63 ஆவது தேசிய திரைப்பட விருதுக்காக இசையமைப்பாளர் இளையராஜா சிறந்த இசைக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்? 

வாழ்த்துக்கள் 

“விசாரணை’’ தமிழ் திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பதற்கு உங்கள் பதில் என்ன? 

வாழ்த்துக்கள் 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எந்த அணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பீர்கள்?

இதற்கு பதில் கூற விரும்பவில்லை என அவர்  தெரிவித்துள்ளார்.