(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படைகள், அடுத்த வருடம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள் இன்றைய தினம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானதன் பின்னர் ஆறாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும். 

அந்தவகையில் இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளே இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு,

றோயல் கல்லூரி – 187

புனித சில்வெஸ்டர் கல்லூரி – 183

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி – 178

ஹாட்லி கல்லூரி – 176

யாழ் இந்துக்கல்லூரி – 164

யாழ் மத்திய கல்லூரி – 164

இசிபத்தன கல்லூரி – 175

புனித மைக்கல்ஸ் கல்லூரி – 165

வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை – 167

ஸாஹிரா கல்லூரி – 164

காத்தான்குடி மத்திய கல்லூரி – 164

ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி – 162

கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை – 185

முஸ்லிம் மகளிர் கல்லூரி – 180

விகாரமகாதேவி பி.எம்.வி பாடசாலை – 179

புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி – 176

வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலை – 173

புனித கேப்ரியல் மகளிர் கல்லூரி – 171

மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை – 171

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – 169

மகமுத் மகளிர் கல்லூரி – 168

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி – 168

பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் - 166

படி-யுத்-டின் மகமுத் பாலிகா வித்தியாலயம் - 165

புனித செசிலியா மகளிர் கல்லூரி – 164

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி – 178

கேம்பிரிஜ் கல்லூரி – 170

பதுரயா மகா வித்தியாலயம் - 169

விவேகானந்தா கல்லூரி – 166

மூதூர் மத்திய கல்லூரி – 166

அல்-முபாரக் மகா வித்தியாலயம் - 165

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி – 165

கெகுனகொல்ல தேசிய பாடசாலை – 165

ஊவா விஞ்ஙான கல்லூரி – 165

மாவனல்லை ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம் - 165

கொக்குவில் இந்துக்கல்லூரி – 164

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி – 164

வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் - 164

வாழைச்சேனை அன்-நூர் மகா வித்தியாலயம் - 164

அலிகர் மத்திய கல்லூரி – 164

சாவகச்சேரி இந்துக்கல்லூரி – 164

கமெல் பற்றிமா கல்லூரி – 163

புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 162

அல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 162