அமெரிக்க தூதுவர் மஹிந்தவை குற்றம் சுமத்துகின்றார் : பந்துல

Published By: Vishnu

12 Dec, 2018 | 05:06 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததன் பின்னரே இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைப் போன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். 

2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் பொருளாதாரத்தினை பொறுப்பேற்ற போதே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்பதை அவருக்கு தெரியப்படுத்த விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினுடைய இல்லத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்க தேரர்களை அண்மையில் சந்தித்திருந்தார். அந்த சந்திப்பின் போது தற்போது இலங்கை பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அவருக்கு ஒரு விடயத்தினை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றோம். 

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்தராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. ஆரம்பித்துள்ளது என்ற அர்த்தத்தில் அண்மைய அரசியல் நெருக்கடியின் காரணமாகவே பொருளாதாரம் வீழச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொருளாதார நிர்வாகக் குழு அமைக்கப்பட்ட போதே இலங்கையின் பொருளாதாரம் வீழ்;ச்சியடைய ஆரம்பித்து விட்டது. 

ரணில் விக்ரமசிங்கவினுடைய பொருளாதாரக் கொள்கையின் மூலம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு ஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாரிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33