யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; மூவர் காயம்

Published By: Digital Desk 4

12 Dec, 2018 | 03:15 PM
image

யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்து அம்மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டாம் வருட மாணவர்களுடன் தங்கியிருந்த சக மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43